அமீரக தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அமீரகத்தின் #The_ UAE_ Remembers என்னும் திட்டத்தின் ஒருபகுதியாக அமீரகத்தின் நலனுக்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு இன்று காலை 11.30 மணிக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
நாட்டிற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் தியாகிகளின் குடும்ப விவகாரத்துறை இந்த மவுன அஞ்சலியை ஏற்பாடு செய்கிறது.
ஒவ்வொரு வருடத்தின் இந்நாளிலும் அமீரக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டவர்கள் என பல்வேறு மக்களால் அமீரகத்தின் புதல்வர்கள் பல்வேறு வகையில் நினைவுகூரப்படுகிறார்கள்.
பன்முகத்தன்மை வாய்ந்த அமீரகத்தின் புகழ் குன்றின்மேலிட்ட விளக்காய் பிரகாசிக்க தங்களது உயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கு UAE Tamil Web குழு வணக்கம் செலுத்துகிறது.