UAE Tamil Web

“எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் இது” – ஈரான் அணு விஞ்ஞானி படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமீரக அரசு..!

Mohsen Fakhrizadeh

ஈரானின் அணு விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும் மொஹ்சென் ஃபக்ரிசேதா (Mohsen Fakhrizadeh) தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

பிராந்தியத்தின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் பாதுகாப்புத் துறை  சவால்களை சந்தித்து வருகிறது. ஆகவே பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசுகளும் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

“மத்திய கிழக்குப் பகுதியில் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் படுகொலை செய்யப்பட்ட ஈரானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மொஹ்சென் ஃபக்ரிசேதாவின் மரணம் பற்றியெரியும் பிராந்திய சிக்கல் என்னும் தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பது போலிருக்கிறது” என அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது.

“பிராந்தியத்தின் தற்போதைய நிலையைக் கணக்கில்கொண்டு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து அரசுகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு விடுக்கிறது” என அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.