சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பொது இடங்களைத் தகர்க்க வெடி பொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் மூலமாக முயற்சித்திருக்கிறது ஹவுதி தீவிரவாத அமைப்பு. இந்தத் தாக்குதலை சவூதியின் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது.
இந்நிலையில் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் இந்தத் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள், பொதுச் சொத்து ஆகியவற்றை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தீவிரவாத முயற்சி ஒரு கோழைத்தனமான செயலாகும். ஹவுதி தீவிரவாதிகளிடமிருந்து பொதுமக்கள் மற்றும் பயணிகளை பாதுகாக்கவேண்டியதற்கான நடவடிக்கைகளை அரசு முழு வீச்சில் எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்படுகிற இந்த தொடர் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைய உலக நாடுகளை அமீரகம் அழைப்பதாக அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.
“அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது, மேலும் சவூதி எதிர்கொள்ளும் எந்தவொரு அச்சுறுத்தலையும் அமீரகம் தனது பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதுகிறது” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.