UAE Tamil Web

அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள் – அமீரகம் பதிலளிக்கும் என உறுதி!

அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அமீரகம், இந்த பாவம் தண்டிக்கப்படாமல் போகாது என்று உறுதியளித்துள்ளது.

வெளியுறவு மற்றும் சர்வதேச அமைச்சகம் இந்த தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றவியல் சம்பவத்திற்கு அமீரகம் பதிலளிக்கும்” என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி, ஹவுதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமான குற்றம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழு தொடர்ந்து பயங்கரவாதத்தையும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தனது சட்டவிரோத நோக்கங்களை அடைவதற்காகவும் இந்த பயங்கரவாத போராளிகள் எந்தவித தடையுமின்றி குற்றங்களைத் தொடர்வதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பயங்கரவாத செயல்களை கண்டிக்குமாறு சர்வதேச நாடுகளுக்கும் அமீரகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள முஸாஃபா பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் டேங்கர் வெடிப்புக்கும்,அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட சிறிய தீ விபத்திற்கும் ஹவதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த தாக்குதலே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல்களில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், பெட்ரோலிய டேங்கர் வெடிப்பில் பலியான இந்தியர்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு அவர்களது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

“அபுதாபியில் சில சிவிலியன் ஸ்தாபனங்கள் மீது ஹவுதிகள் நடத்திய இந்த பாவமான தாக்குதலை அமீரகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புடனும் கையாளுகின்றனர்” என்று அமீரக அதிபரின் இராஜதந்திர ஆலோசகர் டாக்டர் அன்வர் பின் முகமது கர்காஷ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அட்னாக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் பதிலளிப்பவர்கள் மற்றும் ADNOC அவசரகால பதிலளிப்பு குழு உள்ளிட்ட அவசரகால பதிலளிப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது.

அடுத்தடுத்த இச்சம்பவம் தொடர்பான, விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக மக்கள் மற்றும் சிவில் நிறுவல்கள் மீது ஹவுதி போராளிகள் நடத்திய கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியாவும், பஹ்ரைனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமீரகம் அதன் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் இராஜ்ஜியம் அதன் முழு நிலைப்பாட்டை வலியுறுத்துவதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள சிவில் ஸ்தாபனங்களை குறிவைத்து ஹவுதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களை அரபு செயலாளர் நாயகம் அஹ்மத் அபு அல் கைத் கடுமையாக கண்டித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap