UAE Tamil Web

இந்தியா மற்றும் வங்கதேசம்.. வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படும் கிராமங்கள்.. 20க்கும் மேற்பட்டோர் பலி – ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்த அமீரகம்

இந்திய மற்றும் பங்களாதேஷிய மக்கள் பலர் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அமீரக அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இந்த வெள்ளம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, 20க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்காக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்துள்ளனர்.

வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MoFAIC) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் 20க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது. தீவிரமான வானிலை நிகழ்வுகள் தெற்காசியா முழுவதும் அடிக்கடி மாற்றம்கொள்வதே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வெள்ள நீர், வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள பல கிராமங்களை மூழ்கடித்துள்ளது மற்றும் பங்களாதேஷின் சில்ஹெட் பகுதியில் சுமார் இரண்டு மில்லியன் மக்களை பாதித்துள்ளது. இந்த மழையால் கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மீட்பு பணிகளும் தாமதமாகி வருகின்றது, பயிர்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் குடிநீர் மற்றும் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap