UAE Tamil Web

“1 கிலோ குறைத்தால் 500 திர்ஹம்ஸ் பரிசு” – உடல் பருமனைக் குறைக்க புதிய திட்டத்தைக் கையிலெடுத்த அமீரக அரசு..!

download

உடல்பருமனை பலரும் புறத்தோற்ற நோக்கில் மட்டுமே அணுகுகின்றனர். ஆனால், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு உடல்பருமன் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். உலகளவில் உடல் பருமனான மக்கள் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அமீரகம் பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது.

அமீரகத்தில் உள்ள பெரியவர்களில் 40.1 சதவீத மக்களும் 11- 16 வயதுடையவர்களில் 40 சதவீதம் பேரும் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதமானோரும் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ராஸ் அல் கைமா மருத்துவமனை மற்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் இணைந்து RAK Biggest Weight Loser Challenge என்னும் பிரம்மாண்ட உடல் எடை குறைப்பு திட்டத்தை துவங்குகின்றன.

டிசம்பர் 17 ஆம் தேதிதுவங்கி 10 வாரங்கள் நடைபெறும் இந்த சேலஞ்ச் மார்ச்  4, 2022 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  இதில் அமீரகம் முழுவதிலும் இருந்து சுமார் 3000 பேர் பங்கேற்பார்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் பங்கேற்பவர்கள் டிசம்பர் 17-19 ஆகிய தேதிகளில் மருத்துவமனைக்குச் சென்று எடை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்பாளர்களின் எடைகளை குறித்துக்கொள்வர்.

நேரடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் எடையை பரிசோதித்து தகுந்த ஆவணங்களுடன் இப்போட்டியின் இணையதளம் மூலமாக கலந்துகொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இல்லப்பா.. குரூப்பா கலந்துக்கனும் என நினைப்பவர்களுக்காகவே Corporate Teams Challenge என்னும் வகையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

பரிசுகள்

பணம் முதல் இலவச தங்குமிடம், சுற்றுலா பேக்கேஜ் மற்றும் இலவச உணவு என பல்வேறு பரிசுகள் பங்கேற்பாளர்களுக்கு காத்திருக்கின்றன.

நேரடியாக கல்ந்துகொள்பவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆண் மற்றும் பெண், ஆன்லைன் மூலமாக கல்ந்துகொள்பவர்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், குழுவாக கலந்துகொள்பவர்களில் ஒரு குழு என மொத்தம் 5 பிரம்மாண்ட பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த இணைய முகவரியில் சென்று முன்பதிவு செய்யலாம்.

இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

download
14 Shares
Share via
Copy link