அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடரும் நிலையில் கோவிட்-19 தொடர்பான பாதுகாப்பு விதிகளை 7 எமிரேட்களும் கடுமையாக்கியுள்ளன.
7 எமிரேட்களிலும் உள்ள மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் எத்தனை பேருக்கு அனுமதி, கடை மூடல், பணியாளர்களின் PCR பரிசோதனை முதலிய விரிவான கொரோனா கட்டுப்பாடுகளை கீழே காணலாம். (கட்டுப்பாடுகள் வெளிவந்த தேதியின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது)
புஜைரா
கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக கூட்டங்களுக்குத் தடை.
குறைக்கப்பட்ட திறன்கள்
- பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் 70% பேருக்கு மட்டுமே அனுமதி.
- ஷாப்பிங் மால்களில் 60% பேருக்கு மட்டுமே அனுமதி.
- தியேட்டர்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
- உடற்பயிற்சி நிலையங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
- ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
- பொதுப் போக்குவரத்து சேவைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
உம் அல் குவைன்
- மால்கள் அதன் 60% திறனில் மட்டுமே இயங்க வேண்டும்.
- மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- உணவகங்களில் ஒரு டேபிளுக்கு அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அமர வேண்டும்.
- திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க கூடாது.
- இறுதிச் சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.
- கடற்கரைகள் மற்றும் பூங்காக்களின் திறன் 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- சினிமா ஹால்களின் திறன் 50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- ஜிம்கள் மற்றும் ஃபிட்னஸ் சென்டர்கள் 50% திறனை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
ராஸ் அல் கைமா
- தியேட்டர்கள், பொது நிகழ்ச்சி இடங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் 50% மக்களுக்கு மட்டுமே அனுமதி.
- ஷாப்பிங் மால்களில் 60% பேருக்கு மட்டுமே அனுமதி.
- திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க கூடாது.
- இறுதிச் சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.
- கடற்கரைகள் மற்றும் பூங்காக்களின் திறன் 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- பொதுப் போக்குவரத்து, தனியார் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
ஷார்ஜா
- அனைத்து அரசு ஊழியர்களும், குறிப்பிட்ட சில தனியார் துறை ஊழியர்களும் தொடர்ந்து PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஷாப்பிங் மால்களில் 60% பேருக்கு மட்டுமே அனுமதி.
- தியேட்டர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
- ஜிம்கள் மற்றும் ஃபிட்னஸ் சென்டர்கள் 50% திறனை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
- கடற்கரைகள் மற்றும் பூங்காக்களின் திறன் 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- அனைத்து இசைக்கச்சேரிகளும் 4 வாரங்களுக்குத் தடை.
- திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க கூடாது.
- இறுதிச் சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.
- உணவகங்களில் ஒரு டேபிளுக்கு அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அமர வேண்டும்.
அஜ்மான்
- அனைத்து உணவகங்களும் நள்ளிரவு 12 மணியுடன் மூடப்படவேண்டும்.
- உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவேண்டும்.
- திருமணம் மற்றும் நிகழ்ச்சி அரங்குகளில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி.
- கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அபுதாபி
- அரசு மற்றும் பகுதி அரசு அலுவகங்களில் 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவகங்களுக்கு வருகைதர வேண்டும்.
- பிப்ரவரி 7 ஆம் தேதிமுதல் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க கூடாது. அதேபோல, இறுதிச் சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.
- பார்ட்டிகள் மற்றும் ஒன்று கூடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஊழியர்கள் அனைவரும் ஒவ்வொரு வாரமும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.
- மறு அறிவிப்பு வரும் வரையில் தியேட்டர்கள் மூடப்படவேண்டும்.
- மால்கள் 40 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்.
- ரெஸ்டாரன்ட், காப்பி ஷாப், ஹோட்டல்ஸ், பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் 60 சதவீத மக்களுடன் இயங்கலாம்.
- விளையாட்டு அரங்கங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மக்களுடன் இயங்கலாம்.
- உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள் 50 சதவீத மக்களுடன் இயங்கலாம்.
- டாக்சி 45 சதவீத மக்களுடனும் பேருந்துகள் 75 சதவீத மக்களுடனும் இயங்கலாம்.
துபாய்
- பப்கள், பார்கள் திறக்கத் தடை.
- ஷாப்பிங் மால்கள் 70 சதவீத மக்களுடன் இயங்கலாம்.
- சினிமா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போன்ற உள் அரங்கங்களில் 50 சதவீத மக்களுக்கு அனுமதி.
- ஹோட்டல்கள் 70 சதவீத மக்களுடன் இயங்கலாம்.
- நீச்சல் குளங்கள் மற்றும் தனியார் கடற்கரைகளின் மொத்த திறனில் 70 சதவீத மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ரெஸ்டாரன்ட் மற்றும் கபேக்கள் அதிகாலை 1 மணியுடன் மூடப்பட வேண்டும். மேலும், வளாகங்களுக்குள் எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்துதல் கூடாது.