UAE Tamil Web

3 வயதிற்கு அதிகமான குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் : அமீரக அரசு..!

kids

3 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். அதற்குக் குறைவான குழந்தைகள் முகத் தடுப்பான்களை (face shields) அணியவேண்டும் என அமீரக சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளரும் அபுதாபி சுகாதார மையத்தின் பரவக்கூடிய நோய் பிரிவின் இயக்குனருமான டாக்டர். ஃபரிதா அல் ஹோஸ்னானி தெரிவித்தார்.

கூட்டமான இடங்களுக்கு குறிப்பாக விளையாட்டு மைதானங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லவேண்டாம் என ஹோஸ்னானி தெரிவித்தார். மேலும், அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட முகக் கவசங்களையே பயன்படுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறை ஏற்பாடு செய்த கலந்துரையாடல் கூட்டத்தின்போது இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாக சுவாசக்கோளாறுகள் கொண்ட, நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலவே, தாமாக முகக்கவசத்தை எடுக்க முடியாத குழந்தைகளும் முகக்கவசம் அணிதல் கூடாது என ஹோஸ்னானி தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவாது என்றாலும் அவர்களின் மூலமாக பிறருக்குப் பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமீரகத்தில் சிறந்த கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் ஹோஸ்னானி வலியுறுத்தினார்.

kids
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap