UAE Tamil Web

PCR டெஸ்ட்க்கு 50 திர்ஹம்ஸ் தான் வாங்கணும் ; 24 மணிநேரத்தில் ரிசல்ட் அனுப்பனும் – அனைத்து பரிசோதனை மையங்களுக்கும் அமீரக அரசு கொடுத்த ஷாக்..!

Stock-PCR-test-for-Covid19-

அமீரகத்தில் கொரோனா PCR பரிசோதனைக்கு இடத்தைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமீரகத்தில் உள்ள அனைத்து கொரோனா பரிசோதனை மையங்களும் PCR டெஸ்ட்டுக்கு 50 திர்ஹம்ஸ் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, PCR பரிசோதனை முடிவுகள் 24 மணிநேரத்திற்குள் பயனாளிக்கு கிடைத்திட வகைசெய்ய வேண்டும் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறை ஆகஸ்டு 31 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stock-PCR-test-for-Covid19-
25 Shares
Share via
Copy link