அமீரக அமைச்சகங்கள் மற்றும் அனைத்து அமீரக அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் கண்டிப்பாக ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளவேண்டும் என அமீரக மனிதவள மேம்பாட்டுக்கான பெடரல் ஆணையம் ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மேற்கண்ட நடைமுறையில் இருந்து விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“الاتحادية للموارد البشرية” : تحديث جديد لإجراءات التصدي لـ #كوفيد_19 في الوزارات والجهات الاتحادية .. تشمل مسحة أنف كل 7 أيام، ويستثنى منها الحاصلون على جرعتي اللقاح.#وام pic.twitter.com/WxaVmjOl74
— وكالة أنباء الإمارات (@wamnews) January 18, 2021
முன்னதாக அரசுப் பணியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுத்திருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ காரணங்களினால் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாது என சான்று பெற்றவர்கள் தங்களது நிறுவனத்தின் செலவில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் அரசு ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் இம்முயற்சியை எடுத்திருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதேபோல, ஷார்ஜாவின் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் கொரோனா PCR பரிசோதனை எடுக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.