UAE Tamil Web

அபுதாபி: 100 கொரோனா பூஸ்டர் தடுப்பூசி மையங்கள் ரெடி – விண்ணப்பிப்பது எப்படி?

booster

சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் அதன் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அதிகமாக வைத்திருப்பதன் மூலமாக கொரோனா தாக்கும் அபாயத்திலிருந்து அவர்களைக் காக்கலாம் என்ற திட்டத்தினை முன்னிறுத்தி இந்த அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கிட 100 இலவச மையங்களில் அபுதாபி சுகாதாரத்துறை வசதி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டோசை எடுத்து ஆறுமாத காலம் கழித்து இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் என அமீரக அரசு தெரிவித்திருந்தது. ஆகவே தகுதியுடைய நபர்கள் அருகில் உள்ள பூஸ்டர் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று இலவசமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

அருகில் உள்ள பூஸ்டர் தடுப்பூசி மையங்களை doh.gov.ae என்ற இணையதள முகவரி மூலமாக கண்டறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.