அமீரகத்தில் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
تأكيداً على نهج #الإمارات الاستباقي في الاهتمام بصحة وسلامة المجتمع، تعلن وزارة الصحة عن تحديث الفئات التي يمكنها أخذ اللقاح حيث تم تضمين جميع المواطنين والمقيمين إبتداءً من عمر 16 عام للفئات المؤهلة والمستوفية لشروط أخذ اللقاح ضمن الحملة الوطنية للقاح #كوفيد19.#يدا_بيد_نتعافى
— NCEMA UAE (@NCEMAUAE) January 17, 2021
மருத்துவ ரீதியில் தகுதியான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை அதிகளவில் வழங்கிய நாடு என்னும் லட்சியத்தை மையமாகக்கொண்டு அமீரகம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்தப் பிரிவினருக்கு 100 நபர்களுக்கு 25.12 டோஸ்கள் என்ற வீதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருவதாக அமீரகம் தெரிவித்திருக்கிறது.
அமீரகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 84,842 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1.88 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் சுகாதார நிலையங்களின் முழுப் பட்டியலையும் காண இங்கே கிளிக் செய்யவும்.