அமீரகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமடைந்தனர்.!

uae cured 2 people from coronavirus

அமீரகத்தின் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர் என ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 8 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 3 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சீனாவை சேர்ந்த 73 வயது “லியு யுஜியா” என்ற பெண்மணி முழுமையாக குணமடைந்த முதல் நோயாளி என ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிறந்த சிகிச்சை:

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள 40 வயதுடைய நபர் மற்றும் அவரின் 8 வயது மகனும் சீன குடிமக்கள் ஆவார்கள். இந்த இருவரின் மீட்பானது நாட்டின் சுகாதார அமைப்பின் செயல்திறனை பிரதிபலிக்கிறது. மேலும் அங்கு வாழும் மக்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகமானது அதற்கு சம்மந்தமான தேசிய அமைப்பின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தேசிய திறன்களையும் உச்சகட்ட மருத்துவ வளங்களையும் பயன்படுத்தி செயல்படுகிறார்கள்.

மனமார்ந்த நன்றி:

சீன தூதுவர் “லி ஜுஹாங்” மற்றும் சர்வதேச சுகாதார ஒழுங்குத் துறை தலைவர் டாக்டர் பாத்திமா அல் அட்டார் இவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகனை நேரில் சென்று நலம் விசாரித்ததோடு குணமடைந்ததற்க்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். குணமடைந்த சீன மக்கள் தங்களுக்கு கிடைத்த மருத்துவ கவனிப்பிற்கும், அக்கறைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவின் மூலம் இரு நாட்டிற்கிடையேயான நல்லுறவு வெளிப்பட்டுள்ளது எனவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்பட்ட சுகாதார முறைகள் பாராட்டிற்குறியது என்று சீன தூதர் கூறினார்.

தந்தையும் மகனும் குணமடைந்ததற்கு டாக்டர் பாத்திமா அல் அட்டார் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த வைரஸை எதிர்த்து போராட உலகதரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும், இந்த நோயை தடுப்பதற்கு உதவிய மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார். தந்தையும் மகனும் அமீரகத்தில் சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸின் சிகிச்சை முறை என்பது நோயாளிகளின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிப்பதும், நோயின் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மற்றும் நோயின் தீவிரத்தை குறைப்பதுமே ஆகும். ஏனெனில் இன்றுவரை கொரானோ வைரஸிற்கு தடுப்பூசி ஏதுவும் கண்டறியப்படவில்லை.

தொடரும் கண்காணிப்பு:

இந்த வைரஸை தடுப்பதற்கான ஆய்வுகள் 98% விழுக்காடு நிறைவடைந்துள்ளன என்று டாக்டர் பாத்திமா அல் அட்டார் கூறினார். மேலும் மற்ற 5 நோயாளிகளும் தனித்தனியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் ஒரு நோயாளி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:

Loading...