அமீரகத்தின் பிரபல ரேஃபிள் டிராவான எமிரேட்ஸ் டிரா அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்தவாரம் நடைபெற்ற 95 மில்லியன் திர்ஹம்ஸ் தொகைக்கான டிராவில் ஜாக்பாட்டை யாரும் வெல்லாததால் வரும் ஜனவரி 1, 2022 ஆம் தேதி நடைபெறும் டிராவில் பரிசுத்தொகை 100 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையாக அதிகரித்துள்ளது.
7 எண்களையும் சரியாகத் தேர்ந்தெடுக்கும் அதிர்ஷ்டசாலி நபருக்கு 100 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைக்க இருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய எமிரேட்ஸ் டிராவின் நிர்வாக பங்குதாரர்களில் ஒருவரான முகமது அலவாதி,” எமிரேட்ஸ் டிரா அமீரகத்தின் பிரதான ரேஃபிள் டிராவாகத் திகழ்கிறது. ஆகவே வரும் புத்தாண்டில் 100 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை வெல்லப்போவது யார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்” என்றார்.
அதுமட்டுமல்லாமல் 7 அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு 77,777 திர்ஹம்ஸ் பரிசினைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என எமிரேட்ஸ் டிரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.