UAE Tamil Web

உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் ; அபுதாபி காவல்துறை வெளியிட்ட வீடியோ..!

ROAD

அபுதாபி காவல்துறை நேற்று வெளியிட்ட வீடியோவில் எமெர்ஜென்சி லேனை சில வாகனவோட்டிகள் பிற வாகனங்களை முந்திச்செல்ல பயன்படுத்துவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

You Comment திட்டத்தின் மூலமாக அபுதாபி காவல்துறை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளன.

சாலை மற்றும் போக்குவரத்திற்கான பெடரல் விதி எண் 42 ன் படி இக்குற்றத்திற்கு 1000 திர்ஹம்ஸ் அபராதமும் 6 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“எமெர்ஜென்சி லேனை பயன்படுத்துவது ஆபத்தான ஒன்றாகும். இதனால் பின்னால் வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் வேகம் தடைபடலாம். விபத்துப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய இந்த வாகனங்கள் தாமதமாகச் சென்றால் அதுவே பல உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துவிடும்” என அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

ROAD
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap