UAE Tamil Web

அமீரகத்தில் விபத்தைப் பார்த்தால் தயவுசெய்து இதை மட்டும் செய்யாதிங்க..!

Accident

நாம் செல்லும் வழியில் ஒருவருக்கு விபத்து நேர்ந்தால், நம்மால் காயமடைந்த/பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லை எனில் உதவ முன்வருபவர்களுக்கு இடமாவது அளிக்கவேண்டும். வினோத பிராணியைப் பார்த்தது போல் கூட்டம் கூடி, விபத்தில் சிக்கியவரை வேடிக்கை பார்க்கும் பழக்கம் மனிதர்களுக்கு நிறையவே உண்டு. இதில் நாடு, மொழி என்ற பிரிவினை எல்லாம் கிடையாது.

ஆனால், அமீரகத்தில் இதற்கு தண்டனை உண்டு. ஆமாம், விபத்து நேர்ந்த இடத்தை வேடிக்கை பார்த்தால் 1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இப்படி கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்களால் ஆம்புலன்ஸ், காவல்துறை, மீட்புக்குழு ஆகியோரின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படும் என்பதால் இதனை அமீரக அரசு குற்றமாகக் கருதுகிறது.

அதேபோல, விபத்தை புகைப்படமோ, வீடியோவோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும். உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி சாலை விபத்தினை/ தீ விபத்தினை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு 1,50,000 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படும்.

“விபத்து குறித்த புகைப்படத்தினை பொதுவெளியில் பகிர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. விபத்தில் காயமடைந்த நிலையில் உள்ள ஒருவரின் புகைப்படத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் பார்த்தால் எத்துனை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்” என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப் பணியாளர்கள் துரித கதியில் செயல்படுவார்கள். அப்போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் விபத்து நேரத்தில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது” என அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

Accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap