UAE Tamil Web

பயன்படுத்திய மாஸ்க்கை பொது இடங்களில் தூக்கி எறிபவர்களுக்கு அபராதம் – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் காவல்துறை..!

Mask

பயன்படுத்திய முகக்கவசங்களை பொது இடங்களில் தூக்கி வீசுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.

அதேபோல, காருக்குள் இருந்து பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு 1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலமாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அபுதாபி காவல்துறை.

பயன்படுத்திய கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை பொது இடங்களில் வீசுவது சமூக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Mask
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap