UAE Tamil Web

அனுமதியின்றி மலையேற்றங்களை ஏற்பாடு செய்தால் 10,000 திர்ஹம்ஸ் அபராதம்.. எச்சரித்த அதிகாரிகள்

hiking

நிறுவனங்கள், டூர் ஆப்ரேட்டர்கள் அல்லது தனிநபர்கள் அனுமதி பெறாமல் மலையேற்றங்கள் அல்லது மலை விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.

- Advertisment -

இந்த தடையை மீறுபவர்கள் 10,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. ராஸ் அல் கைமாவின் மலைப்பகுதிகளில் நடைபயணம் மற்றும் மலையேற்றம் உள்ளிட்டவற்றின் போது நிகழ்ந்த விபத்துகள் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30 வயதான ஆசிய மலையேற்ற வீரர் டயா பள்ளத்தாக்கில் ஒரு மலையிலிருந்து விழுந்து பின்னர் மீட்கப்பட்டார். அமீரகத்தில் குளிர்காலம் மற்றும் சாகச காலம் தொடங்கியதிலிருந்து இச்சம்பவம் ஒரு மலையேற்ற விபத்துக்களில் சமீபத்தியதாகும்.

அதே போல சில வாரங்களுக்கு முன் 50 வயதான எமிராட்டி ஒருவர் வழுக்கி ஒரு குன்றிலிருந்து விழுந்தார். வேறு சம்பவங்களில் ஒரு நபர் மலையேறும்போது மலையில் மயக்கம் அடைந்ததும், மற்றொருவரின் கால் முறிந்த மற்றொரு சம்பவமும் அடக்கம்.

பொதுமக்களைப் பாதுகாக்கும் முயற்சியாக சுற்றுலாத்துறை அதிகாரிகள், ஹைக்கிங் ஆர்வலர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே:

  • உங்கள் வழியைத் திட்டமிடுங்கள் & பாதுகாப்பாக வீடு திரும்புங்கள்
  • அதிகாராப்பூர்வ பாதைகளில் தங்கியிருங்கள்
  • வானிலையை சரிபார்த்து கொள்ளுங்கள்
  • மறவாமல் முதலுதவி பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்
  • பொருத்தமான பூட்ஸ், தொப்பிகள், ஆடை அணியுங்கள், சிறப்பு ஹைகிங் உபகரணங்கள் மற்றும் போதுமான சன்ஸ்கிரீன் பயன்படுத்தங்கள்
  • குப்பைகளை கொட்டாதீர்கள்
  • மலையேற்றத்தின் போது ஆல்கஹால், உரத்த இசை மற்றும் ட்ரோன்கள் தடை செய்யப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்
  • அனைத்து தனியார் நிலங்கள், பண்ணைகள் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து விலகியிருங்கள்.