அபுதாபியில் பணியின் போது உயரத்திலிருந்து கீழே விழுந்த கட்டிடத் தொழிலாளிக்கு 2,50,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்கும்படி அவர் பணிபுரிந்த நிறுவனத்திற்கு அபுதாபி குடும்ப மற்றும் சிவில் நிர்வாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டிடத்தில் 10 மீட்டர் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, தடுமாறி கீழே விழுந்த தொழிலாளிக்கு முதுகெலும்பில் 45 சதவீத ஊனமும் அவரது நடையில் 30% ஊனமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான தொழிலாளியால் இனிமேல் கட்டுமானப் பணிகளில் ஈடுபட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து 6 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடினார் அவர்.
போதிய பாதுகாப்பு உபகரணங்களை நிறுவனம் வழங்காததே விபத்திற்கு காரணம் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 2,50,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்கும்படி நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
