அபுதாபியில் கார்களை வெகு நாட்களாக பொது இடத்தில் நிறுத்தி வைத்தால் உரிமையாளருக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி முனிசிபாலிட்டு எச்சரித்துள்ளது. சொந்த நாடு திரும்புவோர் பல வாகனங்களை பொது இடத்தில் நிறுத்திச் செல்வது வழக்கம். வெகு நாட்களாக ஒரே இடத்தில் வாகனம் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை அபுதாபி முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி பொது இடத்தில் நீண்ட நாள் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் மீது முதலில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்றும் 3 நாட்களில் காரை அப்புறப்படுத்தாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒரு மாதத்திற்குள் திரும்பப்பெற 1,500 திர்ஹம்ஸ் அபராதம் கட்ட வேண்டும் என்றும் இல்லையெனில் 3000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த நேரிடும் என அபுதாபி முனிசிபாலிட்டி எச்சரித்துள்ளது!
