UAE Tamil Web

ஊரடங்குலையும் ஒரு நல்லது நடந்துருக்குபா – ஷார்ஜாவில் இந்த ஆண்டு விவாகரத்து வழக்குகள் குறைவு.. திருமணங்கள் அதிகரிப்பு!

ஷார்ஜா புள்ளிவிவரங்கள் மற்றும் சமூக மேம்பாடு துறை ஆய்வில் நடப்பாண்டில் முதல் 3 மாதங்களில் விவாகரத்து வழக்கு 49% குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகளின் படி 2021ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஷார்ஜாவில் 39 தம்பதிகள் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 77 பேர் விவாகரத்து கோரியிருக்கின்றனர். 39 விவாகரத்து வழக்குகளில் 25 எமிராட்டிகள் என்றும் 9 வழக்குகள் எமிராட்டி கணவனுக்கும் எமிராட்டி அல்லாத மனைவிக்கும் சம்மந்தப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இதேபோல நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் 624 திருமணங்கள் ஷார்ஜாவில் நடந்துள்ளன. இதில் 355 பேர் உள்நாட்டினர் என்றும் 78 தம்பதிகள் எமிராட்டி – எமிராட்டி அல்லாத நபர்கள் எனவும் இதர தம்பதிகள் வெளிநாட்டினர் என ஆய்வின் தெரிய வந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 523 திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விவாகரத்து எண்ணிக்கை குறைவாகவும் திருமண எண்ணிக்கை அதிகமாகவும் பதிவாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

1 Share
Share via
Copy link