UAE Tamil Web

அபுதாபி குழந்தைக்கு Open Heart Surgery – மருத்துவர்களின் 7 மணி நேர போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

அபுதாபியில் உள்ள ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டியில் 10 மாத குழந்தை இருதய பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டது. பிறக்கும்போதே இருதய பிரச்னை இருந்தநிலையில் Open Heart Surgery மூலம் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு முடிவு செய்தது. இதையடுத்து 12 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு 5 கிலோ எடையுள்ள 10 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சையை தொடங்கினர். இக்கட்டான இந்த சிகிச்சை 7 மணி நேரம் வரை நீடித்தது. இறுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு குழந்தையும் உடல்நலன் தேறியுள்ளது. தொடர்ந்து 10 மாத குழந்தை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இதுபோன்றதொரு அறுவை சிகிச்சை நடைபெறுவது அரிது என்றும் வெற்றிகரமாக மருத்துவக் குழு 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் குழந்தைக்கு சிகிச்சை அளித்து பத்திரமாக உயிரை மீட்டுள்ளதாகவும் சேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மருத்துவக் குழுவினரின் அயராத முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

0 Shares
Share via
Copy link