UAE Tamil Web

கோவிட்-19: செவித்திறன் பிரச்சனைகளுக்கு ஆளாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.! காரணத்தை விளக்கும் மருத்துவர்கள்..

hearing

இந்த கோவிட் -19 பேரிடர் காலத்தில் அமீரகத்தில் அதிக மாணவர்கள் செவிப்புலன் தெடர்பான பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. இதற்கு ஹெட்ஃபோன் பயன்பாடு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisment -

காது கேளாமை தெடர்பான பிரச்சனைகளுடன் வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அமீரக மருத்துவர்கள் சமீபத்தில் கவனித்துள்ளனர். மேலும் இது கோவிட்-19 காலத்தில் நீண்ட நேர ஹெட்ஃபோன் பயன்பாட்டின் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்காக மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது, அவர்களின் செவிப்புலனை பாதுகாப்பாக வைத்திருக்க பெற்றோரை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளை தவிர்த்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான வீடியோ சாட்கள், கேம்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை குழந்தைகள் ஹெட்ஃபோனை நம்புவதை அதிகரிக்கும் பிற காரணிகளாகும்.

இந்நிலையில் துபாயை சேர்ந்த ENT நிபுணர் ஒருவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் ஹெட்ஃபோன் மூலம் ஆடியோவை அதிக சத்தம் மற்றும் அதிக நேரம் கேட்பது நிரந்தர செவிப்புலன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார். துபாய் பிரைம் மருத்துவமனையின் ENT நிபுணரான டாக்டர் பிரசாந்த் சர்மா கூறுகையில், ஹெட்ஃபோன்கள் அல்லது காது இயர்பட்ஸ்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக ஏறத்தாழ 5 முதல் 10% குழந்தைகள் சிரமங்களை சந்திப்பதை நாங்கள் காண்கிறோம். நீண்ட நேர ஹெட்ஃபோன்களின் பயன்பாடு நிச்சயமாக எல்லா வயதினருக்கும், குறிப்பாக குழந்தைகளின் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதே போல தொலைபேசிகளும் அதிக அளவுகளில் நீடித்த பயன்பாடுகளின் போது மின்காந்த கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன என்பதையும், அவை முடி செல்களை சேதப்படுத்தும் மற்றும் சென்சார்நியூரல் எனப்படும் காது கேளாமைக்கு வழிவகுக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்” என்றார்.

துபாயின் அல் நஹ்தாவிலுள்ள ஆஸ்டர் கிளினிக்கின்(Aster Clinic) ENT அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷியாம் அனில் பேசுகையில், இயர்ஃபோன் பயன்பாடு காது நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வழிவகுக்கும். இயர்ஃபோனை நேரடியாக வெளிப்புற காதிலிருந்து நடுத்தர காது வரை செல்லும் ஒலி செல்லும் பாதையில் வைத்து பயன்படுத்துவதால், காற்றின் வழியை அவை தடுக்கின்றன மற்றும் வியர்வை உருவாகி காது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து செவிப்புலன் பாதிப்புகள் ஏற்படுகிறது’என்று விளக்கினார்.

மேலும் பேசிய மருத்துவர் ஷியாம், நீண்ட நேரம் மற்றும் பல நாட்களுக்கு இயர்ஃபோன்களை அதிக அளவில் பயன்படுத்தினால், அது டின்னைட்டஸ் (காதில் கேட்கும் ஒரு வித ஒலி) எனப்படும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. தவிர இரைச்சலால் ஏற்படும் செவிட்டுத்தன்மையால் பாதிக்கப்படும் வாய்ப்பும், அவர்களால் சில அதிர்வெண்களில் சரியாக கேட்க முடியாது நிலையும் ஏற்படும் என்றார்.