பயணி ஒருவர் தான் பயணம் செய்த டாக்சியில் 9 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை மறந்து வைத்து விட்டு சென்றுவிட்டார். இதை பார்த்த அந்த டாக்சியின் ஓட்டுனர் முகமது ஒர்பான் முகமது ரஃபீக் என்பவர் அருகிலுள்ள காவல்நிலையத்தில் பணம் முழுவதையும் ஒப்படைத்த சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பர் துபாய் காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் சோரூர் இவரது நேர்மையை பாராட்டி நேர்மைக்கான சான்றிதழ் ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து காவல் துறை இயக்குனர் அப்துல்லா கூறுகையில், இந்த செயலின் மூலம் சமூகம் மற்றும் காவல்துறை இடையிலான ஒத்துழைப்பு மற்றும் முக்கியத்துவம் வெளிப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களை ஊக்குவிப்பதற்கு காவல்துறை மிகுந்த ஆர்வமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ரஃபீக் கூறும்போது என்னுடைய நேர்மையை பாராட்டி கௌரவித்த காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு இது எனக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளித்துள்ளது என்று அவர் கூறினார்.