UAE Tamil Web

அபுதாபி: மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த கார் – ஓட்டுனருக்கு வேட்டுவைத்த போலீஸ்..!

அபுதாபியில் தனது ஸ்போர்ட்ஸ் காரை மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஒரு பிரகஸ்பதி. இந்த வீடியோவைக்கண்ட அபுதாபி நீதித்துறை (ADJD) அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டிரைவரை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

அப்போது,”அதிக லைக்ஸ் கிடைக்கும் என்பதற்காக இப்படிச் செய்ததாக” சொல்லியிருக்கிறார் அதிவேக ஆசாமி. அவருடைய உயிரை பணயம் வைப்பது மட்டுமல்லாமல் சாலை உபயோகிப்பாளர்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளியது குற்றம் என நீதித்துறை தெரிவித்திருக்கிறது.

அவர் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அதிகாரிகள், இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

1 Share
Share via
Copy link