UAE Tamil Web

இந்தியாவில் இருந்துக் கொண்டே அமீரக லைசன்ஸை புதுப்பிக்க முடியுமா? RTA சொல்வது என்ன? தெரிஞ்சிக்கோங்க உங்களுக்கும் Use ஆகலாம்!

துபாய் Road and Transport Authority ட்விட்டரில் டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிப்பது குறித்து பயனர் கேட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த ட்வீட்டில், “நான் இந்தியாவில் இருந்து எனது யுஏஇ ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். உலகின் பிற பகுதிகளில் உள்ள பல அதிகாரிகள் அத்தகைய கமெண்ட்டினை கடந்து சென்று இருப்பர். ஆனால் RTA ஒரு படி மேலே சென்று அவருக்கு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுமக்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்க விரும்பும் நடைமுறைக்கு நாட்டில் இருக்க வேண்டும் என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், எங்களைத் தொடர்புகொண்டதற்கு நன்றி. உங்களின் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க, UAEயில் உள்ள RTA-ன் அங்கீகரிக்கப்பட்ட ஆப்டிகல் மையங்களில் சரியான Emirates ID மற்றும் செல்லுபடியாகும் கண் பரிசோதனையுடன் UAEயில் இருப்பது கட்டாயம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும் என்று அது ட்வீட் செய்தது.

காலாவதி தேதிக்குப் பிறகு உரிமத்தைப் புதுப்பிக்காமல் விட்டால் வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய அபராத கட்டணங்களுக்கான என்னென்ன?

முதலில், தேவையான ஆவணங்கள்

21 வயதுக்கு குறைவான பயனர்களுக்கு செல்லுபடியாகும் அசல் அமீரக ஐடி

21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகும் அமீரக அசல் ஐடி, கண் பரிசோதனை, வெளியுறவு அமைச்சகத்தின் கடிதம், அமீரக ஐடிக்கு பதிலாக diplomatic card கொடுக்கலாம்.

குடும்ப கார்டு இல்லாத அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு (மர்சூம் வைத்திருப்பவர்கள்)

* செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் நகல்

* சரியான மர்சூமின் நகல்.

அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, அமீரக பெண்களின் மகன்கள்

* செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் நகல்

* பயனரின் தாய் எமிராட்டி என்று குறிப்பிடும் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் கடிதத்தின் நகல்.

இதன் கட்டணம் விவரங்கள்

21 வயதுக்கு குறைவான வாடிக்கையாளர்களுக்கு 100 திர்ஹம்ஸ் புதிப்பிக்கும் கட்டணம், + 20 திர்ஹம்ஸ் Knowledge and Innovation கட்டணம், கண் பரிசோதனை மற்றும் உரிமம் புதுப்பித்தலுக்கு மொபைல் டிரக் சேவையை கோரும் போது 500 திர்ஹம்ஸ் கூடுதல் கட்டணமாக கேட்கப்படும்.

21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 300 திர்ஹம் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கட்டணமாக கேட்கப்படும். கூடுதலாக 20 திர்ஹம்ஸ் Knowledge and Innovation கட்டணம், கண் பரிசோதனை மற்றும் உரிமம் புதுப்பித்தலுக்கு மொபைல் டிரக் சேவையை கோரும் போது 500 திர்ஹம்ஸ் கூடுதல் கட்டணமாக கேட்கப்படும்.

ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்தால் evaluation testக்கு 200 திர்ஹம்ஸ் ட்ரையினிங் ஃபைல் ஓபனிங் கட்டணம், 100 திர்ஹம்ஸ் கற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் கட்டணம், 50 திர்ஹம்ஸ் manual ஹேண்ட்புக் கட்டணம், RTA டெஸ்ட் கட்டணமாக 200 திர்ஹம்ஸ் கேட்கப்படும்.

மேலும், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க தவறியதற்கு காலதாமதத்திற்கு 500 திர்ஹம்ஸ் கட்டணம், 300 திர்ஹமஸ் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம், கூடுதலாக 20 திர்ஹம்ஸ் Knowledge and Innovation கட்டணம் கேட்கப்படும்.

தாமத அபராதம் (10 திர்ஹம்ஸ்) உரிமத்தின் காலாவதி தேதியிலிருந்து மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 500 திர்ஹம்ஸ் வரை கணக்கிடப்படும். உரிமம் 10 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியாகி இருந்தால், அவ்வப்போது புதுப்பித்தல் கட்டணத்தை செலுத்தி, evaluation testக்கு உட்படுத்த வேண்டும்.

ஆர்டிஏ இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது
* கண் பரிசோதனை மையங்களில் ஒரு மின்னணு கண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

* service பிரிவில் உங்கள் அமீரக ஐடி அல்லது ஓட்டுநர் உரிம விவரங்களை உள்ளிட்டால் டேட்டா தானாகவே மீட்டெடுக்கப்படும்.

* வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு OTPஐ அனுப்புவதன் மூலம் அவரது அடையாளத்தை கணினி சரிபார்க்கிறது.

*அதில், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவும். உங்கள் ஓட்டுநர் உரிம விவரங்களை வழங்குவதற்கு முன் உறுதிப்படுத்தவும்.

* தேவையான அனைத்து கட்டணங்களையும், அபராதங்களையும் கிரெடிட் கார்டு மூலம் பே பண்ணவும்.

* அசல் புதுப்பிக்கப்பட்ட உரிமத்திற்காக காத்திருக்கும்போது மின்னஞ்சல் மூலம் தற்காலிக ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவீர்கள், இது 2 முறைகளில் மூலம் வழங்கப்படலாம்:

1. டெய்ரா அல்லது அல் பர்ஷாவில் உள்ள Customer Happiness மையங்கள்

2. டெலிவரி சேவையின் மூலம், டெலிவரி கட்டணம் பின்வருமாறு வசூலிக்கப்படும்.

standard டெலிவரிக்கு 20 திர்ஹம்ஸ், அப்ளே செய்த நாளில் டெலிவரி பெற 35 திர்ஹம்ஸ், 2 மணி நேரத்திற்குள் டெலிவரிக்கு 50 திர்ஹம்ஸ், சர்வதேச டெலிவரிக்கு 50 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap