UAE Tamil Web

துபாய்: பள்ளி மாணவிகளின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை ..!

award

துபாயில் மிகப்பெரிய கல்வி விருதுகளை பெற்ற இரண்டு சகோதரிகளுக்கு ஏற்பட்ட வித்தியாசமான ஆசையைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஷம்மா மற்றும் மரியம் மர்சூகி ஆகிய இருவரும் சகோதரிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கிய காரணத்தினால் பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தும் பெயரால் வழங்கப்படும் புகழ்பெற்ற கல்வி விருதை ஷம்மாவும், சிறந்த மாணவர் பிரிவிற்கு வழங்கப்படும் எமிரேட்ஸ் விருதை மரியம் மர்சூகியும் பெற்றுள்ளனர்.

இந்த இரண்டு மாணவிகளுக்கும் துபாய் காவல் துறையின் உலகத்தரம் வாய்ந்த ரோந்து வாகனத்தில் பயணம் செய்ய ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆச்சரியமான பயணத்தை துபாய் காவல்துறை ஜெனரல் டிபார்ட்மெண்ட் ஆஃப் கம்யூனிட்டி ஹேப்பினஸ் (General Department of Community Happiness), செக்யூரிட்டி அவர்னஸ் துறையுடன் (Security Awareness Department) மற்றும் அல் முராகாபாத் காவல் நிலையத்துடன் இணைந்து மாணவர்களின் ஆசையை நிறைவேற்றி உள்ளனர்.

இதையடுத்து ஷம்மா மற்றும் மரியம் ஆசைப்பட்டவாறு காவல்துறை அதிகாரிகள் அந்த ரோந்து வாகனத்திலேயே அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களை அழைத்து ரோந்து சென்றுள்ளனர். இது தவிர ரோந்து வாகனத்தின் இயக்க முறை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

துபாய் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதோடு, பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி இவர்களை கௌரவித்தனர்.

இதுகுறித்து அந்த மாணவிகள் கூறும்பொழுது, இந்த சூப்பர் போலீஸ் ரோந்து காரில் பயணம் செய்தது எங்களுக்கு எல்லையற்ற ஆனந்தத்தை கொடுத்தது என்று கூறினார்கள்.

award
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap