UAE Tamil Web

பொதுஇடத்தில் பைக் ஓட்டி ஓவராக சீன்போட்ட 2 ஏமிராட்டி இளைஞர்கள் – 2 மாதங்களுக்கு சாலைகளில் குப்பைகளை அள்ள உத்தரவிட்ட நீதிமன்றம்..!

sweeping

கல்பா பகுதியில் போக்குவரத்து மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் பைக்கில் சுற்றிய இரண்டு இளைஞர்களுக்கு வித்தியாசமான தண்டனையை அளித்திருக்கிறது கல்பா பகுதி நீதிமன்றம்.

இரண்டு இளைஞர்களும் வெவ்வேறு இடங்களில் ஒரே குற்றத்தை செய்துள்ளனர். வழக்கை விசாரித்த கல்பா முதன்மை நீதிமன்றம் முதலாவது இளைஞர் ஒன்றரை மாத காலத்திற்கு சமூக சேவைகள் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இரண்டாம் இளைஞருக்கு இது இரண்டு மாதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்கள், சாலைகள், கடற்கரைகள், பொது பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை இந்த இரண்டு இளைஞர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்பா பொது வழக்கு விசாரணையின் இயக்குனர் டாக்டர் சயீத் பெல்ஹாஜ் இதுகுறித்துப் பேசுகையில், “குற்றவாளிகளை உளவியல் ரீதியாக திருத்துவதன் மூலம் அவர்களின் நடத்தையில் ஒரு தீவிரமான மாற்றத்தை கொண்டு வர அரசு எப்போதும் முயல்கிறது” என்றார்.

அமீரக மக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் இந்த இளைஞர்கள் முதலிய யாரும் எடுக்காதவண்ணம் இம்மாதிரி தண்டனைகள் வழங்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

sweeping
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap