UAE Tamil Web

ஈத் அல் பித்ர் : அஜ்மானில் இலவச பார்க்கிங் திட்டம் அறிவிப்பு..!

parking dubai

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ரமலான் 29 ஆம் தேதிமுதல் ஷவ்வால் 3 ஆம் தேதிவரையில் அஜ்மானில் உள்ள பொதுப் பார்க்கிங் இடங்களில் மக்கள் இலவசமாக தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என அஜ்மான் நகராட்சி தெரிவித்துள்ளது.

ஷவ்வால் 4 ஆம் தேதிமுதல் வழக்கம்போல பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கபப்டும் என நகராட்சியின் சமூக வலைத்தள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய எமிரேட்களிலும் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு இலவச பார்க்கிங் திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.