UAE Tamil Web

முக்கியச்செய்தி: ஈத் அல் பித்ர் விடுமுறையை அரசு அறிவித்தது..!

EID AL FITR

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அமீரகத்தில் ரமலான் நோன்பு துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் ரமலானின் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதமான ஷவ்வால் 3 ஆம் தேதிவரையில் ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே உண்டு. இந்த ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடித்தால் விடுமுறை எப்படி விடப்படும் என்பதைக் கீழே காணலாம்.

ரமலான் 29 நாட்கள் நீடித்தால்: 4 நாட்கள் விடுமுறை விடப்படும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 14 ஆம் தேதிவரை (வெள்ளிக்கிழமை) வரை.

ரமலான் 30 நாட்கள் நீடித்தால்: 5 நாட்கள் விடுமுறை விடப்படும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 15 ஆம் தேதிவரை (சனிக்கிழமை) வரை.