UAE Tamil Web

தனியார் நிறுவன ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறையை அறிவித்தது அரசு..!

Eid-prayers-at-home_

அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் அமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறையை இன்று அறிவித்தது. இந்நிலையில் தற்போது அமீரக தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்களை அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ரமலானின் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதமான ஷவ்வால் 3 ஆம் தேதிவரையில் ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமீரக அரசு ஊழியர்களைப் போலவே தனியார் ஊழியர்களும் விடுமுறையைப் பெற இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே உண்டு. இந்த ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடித்தால் விடுமுறை எப்படி விடப்படும் என்பதைக் கீழே காணலாம்.

ரமலான் 29 நாட்கள் நீடித்தால்: 4 நாட்கள் விடுமுறை விடப்படும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 14 ஆம் தேதிவரை (வெள்ளிக்கிழமை) வரை.

ரமலான் 30 நாட்கள் நீடித்தால்: 5 நாட்கள் விடுமுறை விடப்படும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 15 ஆம் தேதிவரை (சனிக்கிழமை) வரை.