UAE Tamil Web

அமீரகம்: கிணற்றுக்குள் மிதந்த பிணம்…! – போலீசார் விசாரணை..!

blood_splatter,_genric_

புஜைராவின் அல் குரையா (Al-Qurayyah) பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்த கிணற்றில் 65 வயது முதியவர் விழுந்து மரணமடைந்ததாக புஜைரா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று புஜைரா காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறை, தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறது.

பண்ணையின் கிணற்றுக்குள் இருந்து முதியவரின் உடலை வீரர்கள் மீட்டுள்ளனர். மேற்கட்ட விசாரணைகளுக்காக உடல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்த வழக்கு குறித்து காவல்துறை விசாரித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blood_splatter,_genric_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap