UAE Tamil Web

உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்த எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட்..!

Emirates Etihad

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான மதிப்பீட்டு இணையதளமான AirlineRatings.com உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் 5 வது இடத்தையும் அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் 20 வது இடத்தையும் பிடித்துள்ளன.

“விமானப் போக்குவரத்துத் துறையிலேயே சிறந்த பிரீமியம் எக்கானமி வகுப்புகளை எமிரேட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அதற்கு 5 வது இடம் வழங்கப்பட்டுள்ளது” என AirlineRatings.com தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 120 இடங்களுக்கு எமிரேட்ஸ் சேவை வழங்கிவருகிறது. இது கொரோனாவிற்கு முந்தைய அளவுகளுக்கு இணையாகும் என எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதெல் அல் ரெதா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

எதிஹாட் நிறுவனம் சமீபத்தில் வியன்னாவிற்கு சேவையை விரிவுபடுத்துவதாக அறிவித்தது. இதனடிப்படையில் மொத்தம் 54 இடங்களுக்கு தற்போது எதிஹாட் விமான சேவையை வழங்கிவருகிறது. தனது பணியாளர்களுக்கு முழு தடுப்பூசியையும் வழங்கிய முதல் விமான நிறுவனம் என்ற பெருமையும் எதிஹாட் நிறுவனத்தையே சாரும்.

டாப் 20 விமான நிறுவனங்கள்

  1. கத்தார் ஏர்வேஸ்
  2. ஏர் நியூசிலாந்து
  3. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
  4. குவாண்டாஸ்
  5. எமிரேட்ஸ்
  6. கேத்தே பசிபிக்
  7. விர்ஜின் அட்லாண்டிக்
  8. யுனைடெட் ஏர்லைன்ஸ்
  9. ஈ.வி.ஏ ஏர்
  10. பிரிட்டிஷ் ஏர்வேஸ்
  11. லுஃப்தான்சா
  12. ஏ.என்.ஏ
  13. ஃபின்னேர்
  14. ஜப்பான் ஏர் லைன்ஸ்
  15. கே.எல்.எம்
  16. ஹவாய் ஏர்லைன்ஸ்
  17. அலாஸ்கா ஏர்லைன்ஸ்
  18. விர்ஜின் ஆஸ்திரேலியா
  19. டெல்டா ஏர் லைன்ஸ்
  20. எதிஹாட் ஏர்வேஸ்.
Emirates Etihad
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap