UAE Tamil Web

அமீரகம்: இணைய வடிவிலான எமிரேட்ஸ் ஐடியை அறிமுகம் செய்தது ICA..!

EMIRATES ID

அமீரக அடையாள மற்றும் குடியிருப்புக்கான பெடரல் ஆணையம் (ICA) மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட இணைய வழி எமிரேட்ஸ் ஐடி -யை வழங்கத் துவங்கியிருக்கிறது.

எலெக்ட்ரானிக் வடிவிலான இந்த எமிரேட்ஸ் ஐடியை ICA UAE அப்ளிகேஷன் மூலமாகப் பெறலாம்.

இதில் QR கோட் இடம்பெற்றுள்ளது. அரசு நிறுவனங்கள் இதன் வழியாக கார்டை வைத்திருப்பவரின் தகவல்களைப் பெறமுடியும்.

அட்டைகள் அச்சிடப்படும்வரையில் ஐடிக்காக விண்ணப்பித்திருப்பவர்கள் இந்த இணையவழி (e-version) கார்டு வசதியைப் பயன்படுத்துமாறு ICA கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய கார்டுகள் அச்சிடப்பட்டு வரும் வரையில் இந்த e-version கார்டு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.