UAE Tamil Web

தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நேர்ந்த கதி..!

surgery

துபாயில் இளம்பெண் ஒருவருக்கு தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் விளைவாக அந்த பெண்ணுக்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடாக கொடுக்க துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராவ்தா அல் மெய்னி என்ற இளம்பெண் கடந்த 2020 ஏப்ரல் மாதம் மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுவாச மண்டலத்தில் பிரச்சினை இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனையின்படி 2020 ஏப்ரல் 23 ஆம் தேதியன்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளிலிருந்து ராவ்தா அல் மெய்னியின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. பரிசோதனை செய்து பார்த்ததில் அறுவை சிகிச்சை சரியான முறையில் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதை விசாரித்த துபாய் சிவில் நீதிமன்றம் அறுவை சிகிச்சை செய்த நிபுணர், மயக்க மருந்து நிபுணர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் அந்த மருத்துவமனையின் உரிமையாளர் ஆகியோர் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணின் உடல் மற்றும் மனதிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக 10 மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த தவறான அறுவை சிகிச்சைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பணம் முழுவதையும் செலுத்தும் வரையில் 9 சதவீத வட்டி வீதத்தை நீதிமன்ற கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவ பொறுப்பிற்கான உச்சகுழுவின் அறிக்கையின்படி இதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை கடந்த 2020 நவம்பர் மாதத்திலிருந்து விசாரித்து வந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனை சரியானது தான் என்று தீர்ப்பளித்ததோடு, குற்றவாளிகளிக்கு ஒரு வருடகால சிறை தண்டனையும், தண்டனை காலம் முடிந்த உடன் அவர்களை அவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மருத்துவமனையின் உரிமையாளருக்கு 300,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

surgery
0 Shares
Share via
Copy link