UAE Tamil Web

ஆம்புலன்ஸ் வரும் வரையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவிசெய்த பெண் – நேரில் வரவழைத்து பாராட்டிய அமீரக காவல்துறை..!

sharjah police

ஷார்ஜாவில் சாலை விபத்தில் சிக்கியவருக்கு ஓடிச்சென்று உதவிய பெண்ணிற்கு ஷார்ஜா காவல்துறை விருது வழங்கி கவுரவித்துள்ளது.

வழக்கம்போல சாலையில் சென்றுகொண்டிருந்த வேளையில், விபத்தில் சிக்கிய நபர் ஒருவரைப் பார்த்திருக்கிறார் மரியம் அல் ஹம்மாடி என்னும் பெண். உடனடியாக தனது காரில் இறங்கி ஓடிய அவர், தன்னுடைய மருத்துவ அனுபவத்தின் மூலமாக முதலுதவிகளைச் செய்திருக்கிறார்.

காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வந்து விபத்தில் சிக்கியவரை அழைத்துச் செல்லும்வரையிலும் ஹம்மாடி அங்கேயே அவருடனேயே இருந்திருக்கிறார்.

ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவின் தற்காலிக இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் ஓமர் பு கனேம், ஹம்மாடிக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

sharjah police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap