அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கிருந்த காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதால் அந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமையன்று (இன்று) தெரிவித்துள்ளது.
அபுதாபியின் ஊழல் தடுப்பு துறை தலைவர் லெப்டினன்ட் கர்னல் மட்டார் மடாத் அல் முஹைரி, அபுதாபி காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், காவல்துறை அதிகாரியின் கடமைகளை சரியாக செய்ய விடாமல், தாங்கள் கூறும் பொய்யான தகவல்களை அந்த காவல்துறை அதிகாரி சமர்ப்பிப்பார் என்ற நம்பிக்கையில் அந்த ஊழியர்கள் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அந்த அதிகாரி அவ்வாறு செய்ய மறுத்து ஊழியர்களை பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உதவினார் என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடந்து முடிந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
அபுதாபி காவல்துறை தளபதி மேஜர் ஜெனரல் ஃபரிஸ் கலஃப் அல் மஸ்ரூய் அவர்கள் அபுதாபி காவல்துறையின் போலீசாரை பாராட்டியதோடு, சட்டத்தை மீறுபவர்களை தடுக்க காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளையும் வெகுவாக பாராட்டினார்.
அதோடு மட்டுமின்றி இது போன்ற ஊழல் நடைபெறும் பட்சத்தில் 8002626 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது 2828 என்ற எண்ணிற்கு க்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதன் மூலமாகவோ புகாரளிக்க தயங்க வேண்டாம் என்று அவர் குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.