UAE Tamil Web

ஆபத்தில் ஆப்கானிஸ்தான் : அமீரக அதிகாரிகளை மீட்கும் பணி தீவிரம்..!

airport (2)

ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டினரை சிறப்பு விமானங்கள் மூலமாக பல்வேறு உலக நாடுகள் மீட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமீரக தூதரகத்தில் பணிபுரிந்துவந்த அதிகாரிகளை மீட்கும் பணியில் துரிதம் காட்டிவருவதாக அமீரக வெளியுறவுத்துறை சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள விமானங்களில், அமீரக, பிரான்சு, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, எகிப்து ஐநாவின் உணவுத் திட்ட அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என ஆப்கானில் சிக்கியுள்ள மக்களை அமீரக விமான நிலையங்களுக்கு அழைத்துவரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இவர்கள் முழுவதும் இன்று அல்லது நாளைக்குள் முழுமையாக அமீரகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

airport (2)
0 Shares
Share via
Copy link