UAE Tamil Web

கீழே கிடந்த லட்சக்கணக்கான திர்ஹம்சை காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்கு பரிசளித்து நன்றி தெரிவித்த அபுதாபி காவல்துறை..!

Abudhabi Police

அபுதாபியில் கீழே கிடந்த லட்சக்கணக்கான திர்ஹம்ஸ் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வணிக வளாகம் ஒன்றில் தான் இந்தப் பணத்தைப் பார்த்ததாகவும், அதை உடனேயே காவல்நிலையத்திற்கு எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அபுதாபி காவல்துறையின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவு இயக்குனர் மேஜர் ஜெனரல் சுஹைல் அல் ரஷீதி, அவருக்கு பரிசளித்தது மட்டுமல்லாமல், நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,”பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையிலும், மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்கள் தங்களது பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டும் என்பதை உணர்த்தவும் இந்த பரிசானது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Abudhabi Police
0 Shares
Share via
Copy link