UAE Tamil Web

கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து – 39 பேர் பலி; பலர் படுகாயம் – அமீரக அரசு அஞ்சலி..!

ferry

கடந்த வெள்ளிக்கிழமை வங்கதேசத்தில் நிகழ்ந்த கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமீரக அரசு அஞ்சலி தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் இருந்து பர்குணா நகரத்திற்கு சுகந்தா ஆறு வழியாகப் பயணித்த கப்பல் ஜலகாதி நகரத்திற்கு அருகே தீப்பிடித்து எரிந்திருக்கிறது. கப்பலின் இரண்டாம் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்து முழு கப்பலுக்கும் பரவியிருக்கிறது. இதனால் பலர் ஆற்றுக்குள் குதித்திருக்கின்றனர்.

தீயில் கருகி 39 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துவதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ferry
1 Share
Share via
Copy link