UAE Tamil Web

தடம்புரண்ட ரயில்; 11 பேர் பலி, 100 பேர் படுகாயம் – இரங்கல் தெரிவித்த அமீரகம்..!

train crash

எகிப்தின் அல் கலுபியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தினால் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 98 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எகிப்து அரசிற்கும், விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஆறுதல் கூறியுள்ளது.

விபத்தில் மரணமடைந்தோரின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சகம், காயமடைந்தோர் விரைந்து குணமாக வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து நைல் டெல்டா மாவட்டமான மன்சோராவிற்குப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலின் 4 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:54 மணிக்கு தடம்புரண்டன. கெய்ரோவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இந்த விபத்து நேர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

train crash
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap