UAE Tamil Web

உலுக்கிய நிலநடுக்கம்: 724 பேர் பலி, 3000 பேர் படுகாயம் இரங்கல் தெரிவித்த அமீரகம்..!

haiti

ஹைதி நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 724 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,800 பேர் படுகாயமடைந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவான இந்த நில நடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்து இருக்கின்றன. இந்நிலையில் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஹைதி நாட்டின் நிலநடுக்கத்திற்கு பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த இயற்கை பேரிடரால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்கள் விரைந்து நலமடைய பிரார்த்திப்பதாக அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

haiti
0 Shares
Share via
Copy link