UAE Tamil Web

பாரம் தாங்காமல் தலைகீழாகக் கவிழ்ந்த படகு – 70 க்கும் அதிகமானோர் பலி – இரங்கல் தெரிவித்த அமீரகம்..!

30-dead-after-boat-capsizes-in-nigeria-

நைஜீரியாவின் வடகிழக்குப் பிராந்தியமான கெப்பி-யில் பாரம் தாங்காமல் படகு ஒன்று கவிழ்ந்ததில் 70 க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய கெப்பி மாகாண ஆளுநர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அபூபக்கர் தகங்காரி,” இதுவரையில் 76 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நீச்சல் வீரர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்.

இந்நிலையில் புதன்கிழமையன்று நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்த மக்களுக்காக இரங்கல் தெரிவிப்பதாகவும் நைஜீரிய அரசிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.