UAE Tamil Web

முக்கிய செய்தி : காலாவதியான விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் ஓவர்ஸ்டே அபராதம் வசூலிக்கப்படமாட்டாது – அமீரக அரசு அறிவிப்பு..!

uae-visa

மார்ச் 1, 2020 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களை கொண்டவர்களுக்கான கருணை காலத்தை இந்த வருடத்தின் இறுதிவரையில் (டிசம்பர் 31, 2020) நீட்டிப்பதாக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) அறிவித்திருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்துப்பேசிய ICA வின் வெளியுறவுத்துறை மற்றும் துறைமுகங்களுக்கான தலைமை இயக்குனர் சயீத் ரக்கான் அல் ரஷீதி,” ஓவர்ஸ்டே விதிமீறலில் ஈடுபட்டோருக்கான கருணைகாலத்தை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் அரசு நீட்டித்திருக்கிறது. நுழைவு மற்றும் வெளிநாட்டவர் குடியிருப்புக்கான சட்டத்தை மீறிய அனைவருக்கும் இந்த நீட்டிக்கப்பட்ட கருணைகாலம் பொருந்தும். விதிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அமீரகத்தை விட்டு அவர்கள் வெளியேறி அபராதத்தை தவிர்க்கலாம்” என்றார்.

மார்ச் 1, 2020 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான டூரிஸ்ட், விசிட் மற்றும் ரெசிடென்சி விசாக்களை வைத்திருக்கும் அனைவரும் இந்த கருணைகாலத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில் அவர்கள் எவ்வித அபராதத்தை செலுத்தவேண்டிய அவசியமில்லை.

காலாவதியான விசாக்களை கொண்டவர்களுக்கு இரண்டாவது கருணைகால வாய்ப்பை வழங்கிய ஆட்சியாளர்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக அல் ரஷீதி தெரிவித்தார்.