அமீரகத்தின் சில குறிப்பிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிப்பதாக அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் மற்றும் அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இன்று அறிவித்துள்ளன.
அதன்படி கீழ்க்கண்ட இடங்களில் (சூழ்நிலைகளில்) மக்கள் தங்களது முகக்கவசங்களை நீக்கிக்கொள்ளலாம்.
- பொது இடங்களில் உடற்பயிற்சி செய்கையில்
- ஒரே வீட்டில் இருப்பவர்களுடன் வாகனங்களில் செல்லும்போது
- கடற்கரைக்கு மற்றும் திறந்தவெளி நீச்சல் குளத்திற்கு செல்வோர்
- மூடிய அறைகளில் தனியாக இருப்பவர்கள்
- சலூன்களில் முகச்சவரம், பேசியல் போன்ற சேவைகளைப் பெறும்போது
- தலை மற்றும் முகப்பகுதியில் மருத்துவ சிகிச்சை பெறுகையில்
எந்தெந்த இடங்களில் முகக்கவசம் அணியவேண்டாம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிறுவனங்கள் விழிப்புணர்வு போர்டு மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டவேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
“الصحة ووقاية المجتمع” و”الطوارئ والأزمات” تعلنان السماح بعدم إلزامية إرتداء الكمام في بعض الأماكن #وام pic.twitter.com/SNOJ6V2Mu4
— وكالة أنباء الإمارات (@wamnews) September 22, 2021
மேலும், விலக்களிக்கப்படாத இடங்களில் மக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிதல் வேண்டும் எனவும் கொரோனாவில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முகக்கவசம் மிக முக்கிய பங்காற்றுகின்றன எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை மக்கள் மறக்காமல் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
