அமீரகத்தில் வீடு ஒன்று தீயில் எரிந்து நாசம்!

Emirati family house gutted in fire (Photo: Instagram)

செவ்வாய்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் ஃபுஜைராவில் மாதாப்பகுதியில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.

வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த புகை கண்காணிப்பான் உதவியுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் தந்தையின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புஜைராவில் உள்ள சிவில் பாதுகாப்புதுறை துணை இயக்குனர் கர்ணல் காலித் கூறுகையில், ‘தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்’ என்று குறிப்பிட்டார்.

சிறப்பு இயந்திரங்கள் உதவியுடன் வீட்டில் அடைந்திருந்த கடுமையான புகை மண்டலம் அகற்றப்பட்டது.

ஆரம்ப கட்ட விசாரனையில் வீட்டின் அமரும் அறையில் தீ முதலில் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

கர்னல் ஹமூடி கூறுகையில், பொதுமக்களுக்கு தங்களுடைய உடைமைகளை பாதுகாக்க தீ பற்றி எரியும் பகுதிக்கு செல்ல முயல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அது எவ்ளோ உயர்வான உடமையாக இருந்தாலும் சரி செல்ல வேண்டாம் என்றும் கூறினார்.

தீ மட்டுமல்ல அதன் கடுமையான புகையும் மக்களுக்கு ஆபத்து என்றும், மேலும் நன்கு பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களை தவிர வேறுயாரும் தீயை கையாள வேண்டாம், என்றும் கூறினார்.

ஜுன் மாத இறுதியில் தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் கருகியதை கண்டதாக மாதாப் கூடுதலாக தெரிவித்தார்.

ஜீன் 2013 இல் புஜைராவில் உள்ள கட்ஃப்பா பகுதியில் பிற்பகலில் ஒரு வீட்டின் அடிதளத்தில் தீப்பிடித்ததை அடுத்து 3 வயதுடைய இரட்டை சகோதரர்கள் மூச்சி திணறி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2018 ஜனவரி 22 ஆம் தேதி அன்று அதிகாலை 5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட ஏழு அமீரக குழந்தைகள் தீ விபத்து காரணமாக மூச்சி திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Source : Khaleej Times

Loading...