UAE Tamil Web

முக்கியச் செய்தி: ஷார்ஜாவில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – தொழிலாளர்கள் வெளியேற்றம்..!

sharjah fire

ஷார்ஜாவின் அல் தாவுன் பகுதியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து ஷார்ஜா சிவில் பாதுகாப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல டவரின் அருகாமையில் வசித்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. அதேபோல உயிரிழப்பு ஏதும் இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

sharjah fire
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap