UAE Tamil Web

அமீரகம்: பிரம்மாண்ட கப்பலில் பரவிய தீ.. அணைக்கும் பணிகள் தீவிரம்..!

fire

உம் அல் குவைன் எமிரேட்டின் அல் ரஃபா பகுதியில் இன்று காலை கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தக் கப்பலில் இன்று காலை 11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக சிவில் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

அதிவேகமாக காற்று வீசியதால் கப்பலின் பிற பகுதிகளுக்கும் தீயானது பரவியிருக்கிறது.

அஜ்மான் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் சிவில் பாதுகாப்புப் படைகள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fire
3 Shares
Share via
Copy link