அமீரக கொடி தினம்; துபாயில் அமீரக தலைவர்களின் உருவப்படத்தை 4,500 கொடிகள் சேர்ந்து வடிவமைத்துள்ளன.!

UAE Flag Day: 4,500 flags form portrait of UAE leaders in Dubai

அமீரகத்தின் கொடி தினத்தை தினத்தைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் அழைப்பை ஏற்று துபாய் அரசு ஊடக அலுவலகம், ஜுமேராவில் உள்ள கைட் பீச்சில் (Kite Beach) கொடி கார்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டன் 6வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார்டெனில் சுமார் 4,500 ஐக்கிய அரபு அமீரக கொடிகள் சேர்ந்து, மரியாதைக்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், (ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர், துபாய் ஆட்சியாளர்) மற்றும் மரியாதைக்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், (பட்டத்து இளவரசர் அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி) ஆகியோரின் உருவப்படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிராண்ட் துபாய் ஏற்பாடு செய்துள்ள இந்த கொடி கார்டன் வரும் டிசம்பர் மாதம் 10 தேதி வரை திறந்திருக்கும் என அறிவித்துள்ளது.

Loading...