அமீரகத்தில் இன்று (நவம்பர் 3) கொடி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமீரக அமைச்சகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் அமீரக கொடி ஏற்றப்பட்டது. போலவே, துபாய் எக்ஸ்போவிலும் அமீரக கொடியினை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஏற்றினார்.
எக்ஸ்போவில் அமைந்துள்ள 190 நாடுகளின் பெவிலியன்களுக்கு முன்பு அமீரக கொடியானது பறக்கவிடப்பட்டது. இது தன்னுடைய பல நாள் கனவு என துபாய் ஆட்சியாளர் ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
احتفلت دولة الإمارات اليوم في مدارسها وجامعاتها وهيئاتها ووزاراتها وبيوتها برفع علم الدولة..رمز عزها ومجدها وسيادتها..واحتفلتُ برفعه في إكسبو أمام أجنحة 190 دولة… علمنا قبل خمسين عاماً كان مجرد فكرة.. كان حلماً .. واليوم نرفعه بفخر وعز أمام 190 دولة . حفظ الله دولة الإمارات.. pic.twitter.com/G4gjc927GN
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 3, 2021
அந்தப் பதிவில்,” பள்ளிகள், கல்லூரிகள், அமைச்சகங்கள் ஆகியவற்றில் இன்று அமீரக கொடியானது ஏற்றப்பட்டிருக்கிறது. தேசத்தின் இறையாண்மையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் இந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். 50 வருடங்களுக்கு முன்னால் தேசிய கொடி என்பது நம்முடைய கனவாக மட்டுமே இருந்தது. இன்று 190 நாடுகளின் பெவிலியன்களுக்கு முன்பு நமது கொடி பறக்கிறது. அமீரகம் நீடூடி வாழட்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
